மண்ணுக்குள் புதையும் ஜோஷிமட் நகரம் - காப்பாற்ற வழி என்ன?
மண்ணுக்குள் புதையும் ஜோஷிமட் நகரம் - காப்பாற்ற வழி என்ன?
உத்தராகண்ட் மாநிலத்தில் இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ள சிறிய மலை நகரமான ஜோஷிமட்டில் உள்ள தனது வீட்டில் ஜனவரி 2ஆம் தேதி அதிகாலையில் கேட்ட பெரும் சத்தம் பிரகாஷ் பூட்டியாலை தூக்கத்தில் இருந்து எழுப்பியது. 52 வயதாகும் இந்த தையல்காரர் எழுந்து, புதிதாக கட்டப்பட்டுள்ள தனது இரண்டு அடுக்கு மாடி வீட்டை பார்வையிட்டார். அந்த வீட்டிலிருக்கும் 11 அறைகளில் ஒன்பது அறைகளின் சுவர்களில் விரிசல் இருப்பதை கண்ட அவரது குடும்பத்தினர் பீதியடைந்தனர். உடனடியாக அந்த வீட்டில் இருந்து தனது 11 குடும்ப உறுப்பினர்களையும், சேதமடையாமல் இருந்த இரண்டு அறைகளுக்கு மாற்றினார், குடும்பத் தலைவரான பிரகாஷ் பூட்டியால். சிறிய அளவில் விரிசல் இருக்கும் அந்த இரண்டு அறைகளில் தான் மொத்த குடும்பமும் இப்போது வரை தங்கியுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



