தினமும் 12 மணி நேர வேலை செய்ய சட்டம் - மோசமாகிறதா தொழிலாளர் நிலை? (காணொளி)

காணொளிக் குறிப்பு, தினமும் 12 மணி நேர வேலை செய்ய சட்டம் - மோசமாகிறதா தொழிலாளர் நிலை?
தினமும் 12 மணி நேர வேலை செய்ய சட்டம் - மோசமாகிறதா தொழிலாளர் நிலை? (காணொளி)

தமிழ்நாட்டில் உள்ள தனியார் நிறுவனங்களில் பணியாற்றுவோர் தினமும் 12 மணி நேரம் பணியாற்ற அனுமதிக்கும் சட்டத்திருத்தம் தமிழக சட்டப்பேரவையில் பெரும் எதிர்ப்புக்கு நடுவில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது தொழிலாளர் நிலையை மேலும் மோசமாக்கும் என தி.மு.கவின் கூட்டணிக் கட்சிகளே சுட்டிக்காட்டுகின்றன.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களின் வேலை நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக உயர்த்துவது தொடர்பான சட்டத் திருத்தம் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ம.தி.மு.க., வி.சி.க. உள்ளிட்ட கடுமையான கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இருந்தபோதும் குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

ஸ்டாலின்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: