டிரம்ப் - மோதி சந்திப்பில் பேசப்பட்ட முக்கிய விஷயங்கள் என்ன?

காணொளிக் குறிப்பு,
டிரம்ப் - மோதி சந்திப்பில் பேசப்பட்ட முக்கிய விஷயங்கள் என்ன?

இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்ற இந்திய பிரதமர் நரேந்திர மோதி அதிபர் டொனால்ட் டிரம்பை வெள்ளை மாளிகையில் சந்தித்தார்.

இந்தச் சந்திப்பில் வர்த்தகம், வரி, இந்தியர்கள் நாடு கடத்தப்படுவது போன்ற பல்வேறு விஷங்கள் குறித்துப் பேசப்பட்டது. இதன் பின்னர் இருநாட்டுத் தலைவர்களும் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது, மோதியை அருகில் வைத்துக்கொண்டே இந்தியாவின் வரி விதிப்பு முறை குறித்த விமர்சனத்தை டிரம்ப் வைத்தார்.

மோதியுடனான சந்திப்புக்கு முன்பாக, 'எங்களின் எதிரிகளைவிட கூட்டாளிகள் மோசமானவர்கள்' என்று டிரம்ப் குறிப்பிட்டிருந்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)