சிம்லா அருகே 5 மாடி கட்டடம் சரிந்து விழுந்த காட்சி

காணொளிக் குறிப்பு, சிம்லா அருகே சரிந்து விழுந்த ஐந்து மாடி கட்டடம்
சிம்லா அருகே 5 மாடி கட்டடம் சரிந்து விழுந்த காட்சி

ஹிமாச்சல பிரதேச மாநிலம் சிம்லா அருகே ஐந்து மாடி கட்டடம் திடீரென சரிந்து விழுந்தது. அருகிலுள்ள நான்கு வழிச் சாலை பணியில் ஈடுபட்டுள்ள கட்டுமான நிறுவனத்தின் அலட்சியத்தால் இந்த சரிவு நிகழ்ந்தது என கிராமவாசிகளும் உள்ளூர் அதிகாரிகளும் கூறுவதாக பிடிஐ செய்தி முகமை கூறுகிறது.

பிடிஐ செய்திப்படி, அருகே உள்ள மேலும் இரண்டு கட்டடங்கள் அதிக ஆபத்தில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, தடுப்பு நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் எந்த நேரத்திலும் அவை இடிந்து விழும் அபாயம் உள்ளது.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு