'இது முடிவல்ல... அடுத்த பாதையை நோக்கியே பயணிக்கிறேன்' - ஓய்வு குறித்து அஸ்வின்
கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். டிசம்பர் 18ம் தேதி அன்று வெளியான இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை திரும்பி வந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், "கடந்த சில காலமாக இது குறித்து யோசித்துக் கொண்டிருக்கிறேன். பலருக்கும் இது 'உணர்ச்சிப்பூர்வமாக' இருக்கும். ஆனால், இதனை நிறைவாக உணர்கிறேன்," என்று கூறினார்.
"கடந்த இரண்டு ஆண்டுகளாக, எடுத்த விக்கெட்டுகள் முதற்கொண்டு எதுவும் கனவில் கூட வருவதில்லை. அப்போதே தோன்றியது நாம் அடுத்த பாதையை நோக்கிப் பயணிக்க வேண்டும்" என்றும் அவர் தெரிவித்தார்.
ஓய்வு குறித்து அவர் அறிவித்தது என்ன? முழு விபரமும் இந்த வீடியோவில்
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



