“என் இதயம் என்னிடத்தில் இல்லை” - காஸாவில் சிக்கிக்கொண்ட பிள்ளைகளை காண முடியாமல் தவிக்கும் தாய்

காணொளிக் குறிப்பு, காஸாவில் ஆபத்தின் விளிம்பில் குழந்தைகள் - படிக்க பிரிட்டன் சென்ற தாய் தவிப்பு
“என் இதயம் என்னிடத்தில் இல்லை” - காஸாவில் சிக்கிக்கொண்ட பிள்ளைகளை காண முடியாமல் தவிக்கும் தாய்

இஸ்ரேல் - பாலத்தீனம் இடையே போர் தொடங்குவதற்கு சில மாதங்களுக்கு முன்னர்தான் காஸாவில் தன் 8 வயது மகன் மற்றும் பதின்பருவ வயதுடைய இரு மகள்கள் மற்றும் கணவரை விட்டுவிட்டு பிஹெச்.டி படிப்புக்காக பிரிட்டன் சென்றார் அமானி.

காஸாவில் உள்ள அவரது அடுக்குமாடி குடியிருப்பும் வான்வழி தாக்குதலால் சேதமடைந்தபோது பயத்தில் அவருடைய 8 வயது மகன் அலறும் காணொளி வைரலானது.

இந்த சூழலில் தன் பிள்ளைகள் உடன் இல்லாததை நினைத்து வருந்தும் அமானியை பிபிசி உலக சேவையின் மக்கள்தொகை செய்தியாளர் ஸ்டெஃபானி ஹெகார்ட்டி எடின்பெர்க்கில் சந்தித்து பேசிய காணொளி இது.

இஸ்ரேல் - பாலத்தீனம்

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)