நரேந்திர மோதி 3வது முறையாக பிரதமர் ஆவது பற்றி சர்வதேச ஊடகங்கள் கூறுவது என்ன?

காணொளிக் குறிப்பு, நரேந்திர மோதி 3வது முறையாக பிரதமர் ஆவது பற்றி சர்வதேச ஊடகங்கள் கூறுவது என்ன?
நரேந்திர மோதி 3வது முறையாக பிரதமர் ஆவது பற்றி சர்வதேச ஊடகங்கள் கூறுவது என்ன?

இந்திய மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகிவிட்டது. இரண்டு முறை தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியில் இருந்த பாரதிய ஜனதா கட்சி இம்முறையும் ஆட்சி அமைக்கப் போகிறது.

ஆனால், இந்தியா கூட்டணி 234 தொகுதிகளைக் கைப்பற்றி, பாஜக தனிப்பெரும்பான்மை பெறுவதைத் தடுத்துள்ளது. மூன்றாவது முறையாக நரேந்திர மோதி பிரதமராகப் போகிறார்.

ஆனால் இதுவரை `மோதி’ என்ற பிம்பத்துக்கு இருந்த செல்வாக்கு தற்போது இல்லை என்பதை தேர்தல் முடிவுகள் உணர்த்தியுள்ளன. இந்த முறை வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட அவர் 1.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

கடந்த 2019ஆம் ஆண்டில் சுமார் ஐந்து லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. சர்வதேச ஊடகங்கள் இந்தியாவின் மக்களவைத் தேர்தல் முடிவுகள் மீது கவனம் வைத்திருந்தன. செவ்வாய்கிழமை வெளியான தேர்தல் முடிவுகள் மோதியை பலவீனப்படுத்திவிட்டது என சர்வதேச ஊடகங்கள் கருதுகின்றன.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)