லெபனான்: பாஸ்போர்ட், பணமின்றி சிக்கியிருக்கும் வெளிநாட்டுப் பெண்கள்
லெபனான் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வெளிநாடுகளில் இருந்து அங்கே வீட்டு வேலை பார்க்கச் சென்ற பெண்கள் தற்போது அந்த நாட்டில் இருந்து வெளியேற இயலாமல் தவித்து வருகின்றனர்.
பாஸ்போர்ட் உள்ளிட்ட தேவையான ஆவணங்களை வேலை வழங்கும் நபர்கள் வைத்திருப்பது வழக்கமான ஒன்றாக இருக்கிறது. இத்தகைய சூழலில் அந்தப் பெண்கள் அவசர அவசரமாகப் பணியிடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டதால் பாஸ்போர்ட்கள் ஏதுமின்றி அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.
தங்குவதற்குப் பாதுகாப்பான இடம் இல்லாத சூழலில், தாக்குதல் நடைபெற்று வரும் பகுதிகளில் உள்ள சாலைகளில் அவர்கள் தஞ்சம் அடைந்துள்ளனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



