காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடிய மோதி
பிரதமர் நரேந்திர மோதி மக்களவையில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான பதிலுரை ஆற்றினார். அவர் தனது பேச்சை தொடங்குவதற்கு முன்பாகவே எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
மணிப்பூர் குறித்து அவர் பேசவேண்டும் என்றும் குரல் எழுப்பினர்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
எதிர்கட்சிகளின் கோஷத்துக்கு மத்தியில் பேசிய மோதி காங்கிரஸ் கட்சியை ஒட்டுண்ணி என விமர்சித்தார்.
‘' காங்கிரஸ் கட்சியின் கூட்டணி கட்சிகள் தேர்தல் முடிவுகளை பகுப்பாய்வு செய்தார்களா என தெரியவில்லை. இந்த முடிவுகள் அவர்களுக்கு செய்தியை கூறுகின்றன. 2024 முதல் காங்கிரஸ் கட்சி ஒட்டுண்ணி கட்சி என்று அறியப்படும். தான் இருக்கும் உடலை உண்பதுதான் ஒட்டுண்ணி. அதேபோல், காங்கிரஸ் கட்சி தன்னுடன் கூட்டணியில் உள்ள கட்சிகளின் வாக்குகளை உண்கிறது. அவர்களின் தயவால் வளர்கிறது'' என சாடினார்.
மோதி கூறிய கருத்துக்கள் இந்த காணொளியில் இடம்பெற்றுள்ள.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



