காணொளி: இதய நோய் ஆபத்தை முன்பே தடுக்கும் 15 நிமிட பரிசோதனை

காணொளிக் குறிப்பு, கால்சியம் ஸ்கோரிங்: இதய நோய் ஆபத்தை முன்பே தடுக்கும் 15 நிமிடப் பரிசோதனையை செய்வது எப்படி?
காணொளி: இதய நோய் ஆபத்தை முன்பே தடுக்கும் 15 நிமிட பரிசோதனை

இப்போதெல்லாம் சிறு வயதினருக்கு கூட இதய பாதிப்பு ஏற்படுவதாக நாம் கேள்விப்படுகிறோம்.

சிலர் எந்த அறிகுறியும் இல்லாமல் இதய பாதிப்புக்கு உள்ளாகின்றனர். அதனால், எந்த வயதாக இருந்தாலும் இதயத்தை ஆரோக்கியமாக பார்த்துக்கொள்வது அவசியம்.

நடுத்தர வயதினரில் யாருக்கெல்லாம் அறிகுறிகளே காட்டாமல் இதய பாதிப்பு இருக்கிறதோ அவர்களே எளிதாக கண்டறிய உதவ ஒரு பரிசோதனை இருக்கிறது.

அத வெறும் 15 நிமிஷத்துலேயே செய்ய முடியும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

அந்த பரிசோதனையின் பெயர்தான் கால்சியம் ஸ்கோரிங். அதாவது கால்சியம் மதிப்பீடு சோதனை.

பொதுவாக தனியார் மருத்துவமனைகளிலேயே செய்யப்பட்டு வந்த இந்த சோதனை இப்போது தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனையில் குறைந்த கட்டணத்தில் செய்யப்பட்டு வருகிறது.

உடலில் கருவி எதுவும் செலுத்தாமல், சுமார் 15 நிமிடங்களுக்குள் செய்யப்படும் இந்த சோதனை, எதிர்காலத்தில் இதய நோய் ஏற்படுவதற்கான ஆபத்து இருக்கிறதா என்பதை தெரிந்துகொள்ள உதவுகிறது.

இந்த பரிசோதனையை செய்வது எப்படி? விரிவாக காணொளியில்...

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு