விஜய், செங்கோட்டையன், ஆனந்த் உள்பட தவெக தலைவர்களின் தொகுதி நிலவரம்

பட மூலாதாரம், TVK
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் விஜயின் தமிழக வெற்றி கழகம் 107 தொகுதிகளில் தற்போது முன்னிலை வகித்து வருகிறது.
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தான் போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் அதிக வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார்.
ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட தவெக முக்கிய தலைவர்களின் தொகுதிகளில் என்ன நிலவரம்?
திருச்சி கிழக்கு
திருச்சி கிழக்கு தொகுதியில் 16-வது சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் 44,978 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் 13,879 வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கி உள்ளார்.
பெரம்பூர்
பெரம்பூர் தொகுதியில் 18-வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் 100253 வாக்குகள் பெற்று விஜய் முன்னிலை வகிக்கிறார்.
திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகர் 44267 வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கியுள்ளார்.

பட மூலாதாரம், TVK
கோபிசெட்டிபாளையம்
கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட கே.ஏ.செங்கோட்டையன் வெற்றி பெற்றுள்ளார். அவர் 82612 வாக்குகளைப் பெற்றார். இரண்டாம் இடம் வந்த திமுகவின் நல்லசிவம் அவரைவிட 16620 வாக்குகள் குறைவாக பெற்று தோல்வியை தழுவினார். அதிமுக வேட்பாளர் பிரபு மூன்றாம் இடத்தையே பெறமுடிந்தது.
தியாகராய நகர்
தமிழக வெற்றி கழக வேட்பாளர் ஆனந்த் 13027 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் சத்தியநாரயணனை வீழ்த்தியுள்ளார். இங்கு திமுக வேட்பாளருக்கு மூன்றாம் இடமே கிடைத்தது.

பட மூலாதாரம், TVK
வில்லிவாக்கம்
தமிழக வெற்றி கழகத்தின் ஆதவ் அர்ஜுனா வில்லிவாக்கம் தொகுதியில் வெற்றி பெற்றார். அவர் திமுக சார்பில் போட்டியிட்ட கார்த்திக் மோகனை விட 17302 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார்
மயிலாப்பூர்
மயிலாப்பூர் தொகுதியில் தவெகவின் வெங்கடரமணன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் திமுக சார்பில் போட்டியிட்ட த. வேலுவை விட 28972 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார். பாரதிய ஜனதா சார்பில் போட்டியிட்ட தமிழிசை செளந்தரராஜன் 32328 வாக்குகளுடன் மூன்றாம் இடத்தையே பிடிக்கமுடிந்தது
கொளத்தூர்
தவெக வேட்பாளர் வி.எஸ். பாபு 82997 வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக தலைவர் ஸ்டாலினை 8795 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.
ஆயிரம் விளக்கு
ஆயிரம் விளக்கு தொகுதியில் தவெகவின் ஜேசிடி பிரபாகரன் வெற்றிபெற்றுள்ளார். அவர் 58965 வாக்குகளைப் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுகவின் எழிலன் நாகநாதன் 43824 வாக்குகளையும், அதிமுகவின் வளர்மதி 23320 வாக்குகளையும் பெற்றனர்.
மதுரை மத்திய தொகுதி
மதுரை மத்திய தொகுதியில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தோல்வியடைந்துள்ளார். அவர் தவெகவின் பதருதீனைவிட 19128 வாக்குகள் குறைவாக பெற்றுள்ளார். அதிமுக சார்பில் போட்டியிட்ட திரைப்பட இயக்குநர் சுந்தர் சி. 33538 வாக்குகளை மட்டுமே பெற்று மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டார்.
திருச்செங்கோடு
தமிழக வெற்றி கழக வேட்பாளர் அருண்ராஜ், 10-வது சுற்று முடிவில் 35,660 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். திமுக வேட்பாளர் ஈஸ்வரன் 23,221 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
திருப்பரங்குன்றம்
த.வெ.க வேட்பாளர் நிர்மல்குமார் 13-வது சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில் 56,800 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். திமுக வேட்பாளர் 17,607 கிருத்திகா தங்கப்பாண்டி வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கி உள்ளார்.
எழும்பூர் - தனி
இங்கு தமிழக வெற்றி கழக வேட்பாளர் ராஜ்மோகன் திமுகவின் தமிழன் பிரசன்னாவை 10804 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.

பட மூலாதாரம், @Actor_Srinath/X
தூத்துக்குடி
தூத்துக்குடியில் த.வெ.கவின் ஶ்ரீநாத் 100536 வாக்குகளைப் பெற்ற நிலையில் கீதா ஜீவன் அவரை விட 37731 வாக்குகள் குறைவாக பெற்றார். இந்த தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட செல்லபாண்டியன் மூன்றாம் இடம் பெற்றார்.
ராதாபுரம்
ராதாபுரம் தொகுதியில் தற்போதைய சபாநாயகர் அப்பாவு தோல்வியை தழுவினார். அவருக்கு எதிராக போட்டியிட்ட தவெகவின் சதீஷ் கிறிஸ்டோபர் 69947 வாக்குகளை பெற்று வெற்றிபெற்றார். பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் மூன்றாம் இடத்தை பிடித்தார்.
திருப்பூர் வடக்கு
திருப்பூர் வடக்கு தொகுதியில் தவெகவின் வி சத்தியபாமா 89,981 வாக்குகள் பெற்று 48445 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளர். அதிமுகவைச் சேர்ந்த எம்.எஸ்.எம். ஆனந்தன் 41536 வாக்குகளுடன் இரண்டாம் இடத்திலும். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த எம். சுப்பிரமணியன் 36375 வாக்குகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.
காரைக்குடி
காரைக்குடி தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பின்னடைவை சந்தித்து மூன்றாம் இடத்தில் உள்ளார்.
அங்கு தவெகவின் டிகே பிரபு 63976 வாக்குகளுடன் முதலிடத்தில் உள்ளார். காங்கிரஸ் கட்சியின் மாங்குடி 33660 வாக்குகளுடன் இரண்டாம் இடத்தில் இருக்கிறார். சீமான் 19189 வாக்குகள் மட்டுமே பெற்று மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
மதுரை வடக்கு
மதுரை வடக்கு தொகுதியில் திமுகவின் தளபதி மற்றும் அதிமுகவின் சரவணன் இருவரையும் பின்னுக்கு தள்ளி தவெகவின் வேட்பாளர் கல்லணை வெற்றி பெற்றார்.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை தொகுதியில் தவெக வேட்பாளர் தஹிரா திமுக அமைச்சர் ஆர். காந்தியை 5787 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். தஹிரா 91149 வாக்குகள் பெற்ற நிலையில், ஆர். காந்தி 85362 வாக்குகளை பெற்றார்
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































