காணொளி: கோவா இரவு விடுதியில் நேரிட்ட தீ விபத்தில் 25 பேர் பலி

காணொளிக் குறிப்பு, கோவா இரவு விடுதியில் நேரிட்ட தீ விபத்தில் 25 பேர் பலி
காணொளி: கோவா இரவு விடுதியில் நேரிட்ட தீ விபத்தில் 25 பேர் பலி

வடக்கு கோவா அர்போராவில் சனிக்கிழமை இரவு ஒரு இரவு விடுதியில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 25 பேர் உயிரிழந்ததாக கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார். மேலும், காயமடைந்த 6 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அவர் தெரிவித்தார். சிலிண்டர் வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த விபத்தில் இறந்தவர்களில் சில சுற்றுலாப் பயணிகளும் அடங்குவர். இறந்தவர்களில் பெரும்பாலானோர் கிளப் ஊழியர்கள் என்று நம்பப்படுகிறது. இந்த தீ விபத்துக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோதி இரங்கல் தெரிவித்துள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு