இந்தத் தீவில் மட்டுமே வாழும் மஞ்சள் நெடுவாலி அழிவில் இருந்து மீண்டது எப்படி?

காணொளிக் குறிப்பு, மஞ்சள் நிற நெடுவாலிகள் அழிவில் இருந்து மீண்டது எப்படி?
இந்தத் தீவில் மட்டுமே வாழும் மஞ்சள் நெடுவாலி அழிவில் இருந்து மீண்டது எப்படி?

ஈக்வடார் நாட்டில் உள்ள கலபகோஸ் தீவுகளில் மட்டுமே வாழும் உயிரினம் தான் இந்த மஞ்சள் நிற நெடுவாலி. நெடுவாலி உடும்பு இனத்தின் ஒரு வகையாகும்.

1970 மற்றும் 1980-களில் இந்த பகுதியில் இந்த உயிரினங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழிவை சந்தித்தன.

மனிதர்களால் இங்கே அறிமுகம் செய்யப்பட்ட ஆடுகளும் நாய்களும் தான் இந்த அழிவுக்குக் காரணம் என்று கூறுகின்றனர் வனவிலங்கு பாதுகாப்பு ஆர்வலர்கள்.

தற்போது தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்ட பிறகு இந்த நெடுவாலிகளின் எண்ணிக்கை உயர்ந்து வருவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

அழிவில் இருந்து மஞ்சள் நிற நெடுவாலிகள் மீண்டது எப்படி?

முழு தகவலும் இந்த வீடியோவில்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)