வங்கிக் கணக்குக்கு வந்த எண்ணவே முடியாத அளவு பணம் - அதிர்ந்த உ.பி நபர்

காணொளிக் குறிப்பு, வங்கிக் கணக்கில் திடீரென வந்த மிகப்பெரிய தொகை
வங்கிக் கணக்குக்கு வந்த எண்ணவே முடியாத அளவு பணம் - அதிர்ந்த உ.பி நபர்

உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த திலீப் சிங்கின் வங்கிக் கணக்கில் ஒரு பிரச்னை வந்தது. அவருடைய கணக்கில் திடீரென மிகப்பெரிய தொகை வந்ததால் வங்கி அவருடைய கணக்கை ப்ளாக் செய்துவிட்டது.

"கணக்கில் எவ்வளவு பணம் வந்தது என்பதே எனக்குத் தெரியவில்லை. என்னால் எண்ண முடியவில்லை, ஏனென்றால் 37 இலக்கங்கள் கொண்ட எண், அது எவ்வளவு என்பது கடவுளுக்குத்தான் தெரியும். அந்த எண்ணை கூகுளில் போட்டு எவ்வளவு என்று தெரிந்துக் கொள்ள முயன்றேன், ஆனால் கூகுளாலும் எந்த பதிலும் கொடுக்க முடியவில்லை." என்கிறார் திலீப் சிங்.

"எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. என்னுடைய கணக்கில் இந்தப் பணம் வந்திருந்ததால் ஒருவேளை கடவுள் எனக்கு ஏதாவது நல்லது செய்திருக்கலாம் என்றும் தோன்றியது. ஆனால் உண்மையில் அப்படி இருக்காது, ஏனென்றால் என்னிடம் இருப்பது சேமிப்புக் கணக்குதான். அதில் இவ்வளவு பணத்தை என்னால் வைத்திருக்க முடியாது. முதலில் இந்தப் பணம் போலியானது என்று நினைத்தேன்."

"இது ஒரு மோசடியாக இருக்கலாம், ஒருவேளை யாராவது கணக்கை ஹேக் செய்து தங்கள் சொந்த நலனுக்காகப் பயன்படுத்தியிருக்கலாம் என்று தோன்றியது. உண்மையில் இந்த பணம் என் வங்கிக் கணக்கில் தான் இருக்கிறதா என்பதை உறுதி செய்ய, சிறு தொகையை வேறொரு கணக்கிற்கு மாற்ற முயற்சித்தேன், ஆனால் பணத்தை மாற்றமுடியவில்லை. 'உங்கள் வங்கியில் தொழில்நுட்ப சிக்கல் உள்ளது' என்ற செய்தியே பல முறை வந்தது." என்றும் அவர் கூறுகிறார்.

முழு விவரம் காணொளியில்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு