காணொளி: இலங்கையில் கேபிள் கார் விபத்தில் ஏழு புத்த துறவிகள் பலி
காணொளி: இலங்கையில் கேபிள் கார் விபத்தில் ஏழு புத்த துறவிகள் பலி
இலங்கையில் கேபிள் கார் விபத்தில் ஏழு புத்த துறவிகள் உயிரிழந்தனர்.
கொழும்புவில் இருந்து 130 கிமீ தொலைவில் உள்ள குருநெகலாவின் நா உயன வன பௌத்த மடத்தில் இந்த கேபிள் கார் விபத்து செப்டம்பர் 24ஆம் தேதி இரவு 9:10 மணியளவில் நடந்தது.
காயமடைந்த மற்ற ஆறு துறவிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இறந்தவர்களில் மூவர் இந்தியா, ரஷ்யா மற்றும் ரொமேனியாவை சேர்ந்தவர்கள்.
நா உயன பௌத்த மடத்தில் உலகம் முழுவதில் இருந்தும் சுமார் 200 துறவிகள் உள்ளனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



