மோதியால் நிதீஷ் குமார், சந்திரபாபு நாயுடுவுடன் இணைந்து கூட்டணி ஆட்சியை நடத்த முடியுமா? - காணொளி
புது டெல்லியில் உள்ள பிபிசியின் தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்த அரசியல் செயற்பாட்டாளர் யோகேந்திர யாதவ், பிபிசி செய்தியாளர்கள் குழுவுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
தேர்தல் முடிவுகள் குறித்தும், பாஜகவின் புதிய கூட்டணி அரசு குறித்தும் பிபிசி செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார் யோகேந்திர யாதவ்.
பிபிசி தமிழின் ஆசிரியர் தங்கவேல் அப்பாச்சி, அவரிடம், “நரேந்திர மோதியால் நிதீஷ் குமார், சந்திரபாபு நாயுடுவுடன் இணைந்து கூட்டணி ஆட்சியை நடத்த முடியுமா? தற்போதுதான் முதன்முதலாக இத்தகைய சவாலை அவர் எதிர்கொள்கிறார்” என்று கேட்டார்.
அதற்கு பதிலளித்த யோகேந்திர யாதவ், “ஆம், நிச்சயம் அது கடினமாக இருக்கும். கூட்டணி ஆட்சி என்பதால் கடினமாக இருக்கும் என்பதல்ல. மோதிக்கு ஜனநாயகம் பழக்கமில்லை. அவரது கட்சிக்குள்ளேயும் சரி, வெளியேயும் சரி, மனரீதியாக அவர் ஜனநாயகத்துக்கு ஏற்றவர் அல்ல.” என்றார்.
தொடர்ந்து பேசிய யோகேந்திர யாதவ், “ஆனால், அவரது அரசியல் திறமையை நாம் குறைத்து மதிப்பிடுகிறோம். அவர் சூழலுக்கு ஏற்ப தகவமைத்து கொள்வார்.
தெலுங்கு தேசமும், ஐக்கிய ஜனதா தளமும் கூட்டணி ஆட்சிக்கு வரும்பட்சத்தில், அவர்களிடம் அதிகாரம் இருக்கும், தமது கொள்கைகளில் உறுதியாக இருப்பார்கள் என்பது நமது புரிதல்.
அந்த அனுமானம் சரியாக இல்லாமலிருக்கலாம். கூட்டாளிகளை மகிழ்ச்சியாக வைத்திருக்க பல வழிகள் உண்டு. சிலவற்றை என்னால் கூறமுடியாது. அது என்னவென்று உங்களுக்கே தெரியும். மோடியால் அதை செய்ய முடியும்” என்று கூறினார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



