மும்பை: பாதுகாப்பற்ற பொது மைதானங்கள், கால்பந்து கனவை கைவிடும் ஏழைச் சிறுமிகள்
மும்பையின் மான்குர்த் குடிசைப் பகுதியில் வாழும் 14 முதல் 15 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கு விளையாட்டில் பெரும் ஆர்வம் உள்ளது. இவர்கள் ஏழ்மையான பின்னணி கொண்டவர்கள்.
நெரிசலான, சுகாதாரமற்ற நிலையில் வாழும் இவர்கள் கால்பந்து விளையாடுவதை மிகவும் விரும்புகின்றனர். ஏனெனில் இது அவர்களின் கடுமையான வாழ்க்கையில் இருந்து தப்பிக்க ஒரு அரிய வாய்ப்பை வழங்குகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக இவர்களின் பயிற்சியாளராக இருக்கும் ஷப்னம் ஷேக் இதற்கு உறுதுணையாக இருந்து வருகிறார். விளையாட்டு மைதானம் என்பது வெறும் கால்பந்துக்கான இடம் மட்டுமல்ல. இந்த சிறுமிகள் தங்கள் கனவுகளை துரத்துவதற்கான ஒரு தளத்தையும் அது வழங்குகிறது.
சமீப ஆண்டுகளில், குறிப்பாக பின்தங்கிய பின்னணியில் இருந்து, விளையாட்டுத்துறைக்குள் வரும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தப் போக்கு ஊக்கமளிக்கிறது. இந்த மாற்றங்கள் இருந்தபோதிலும், மான்குர்த்தில் உள்ள சிறுமிகள் சில ஒழுக்கமற்ற ஆண்களின் தொடர் துன்புறுத்தலால் விளையாட்டிலிருந்து விரட்டப்படுகிறார்கள்.
இங்குள்ள பகுதியில் விளையாட தனியார் மைதானங்கள் இல்லாததால், பாதுகாப்பற்ற பொது மைதானங்களையே இந்த சிறுமிகள் பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது.
“இங்கு பெண்களுக்கு இடம் இல்லை. மைதானம் தங்களுக்கு மட்டுமே சொந்தம் என்று ஆண்கள் நினைக்கிறார்கள். நாங்கள் விளையாட முயற்சிக்கும் போது ஆண்கள் விரோதத்துடன் நடந்து கொள்கிறார்கள். நாங்களாக பயந்து வெளியேறும் வரை எங்களை அச்சுறுத்தவும், மிரட்டவும் செய்கிறார்கள்” என்கிறார் ஷப்னம் ஷேக்.
முழு விவரம் காணொளியில்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



