பாஜகவுடன் கூட்டணி அமைப்பது அதிமுகவுக்கு பலன் அளித்துள்ளதா? - ஒரு வரலாற்றுப் பார்வை

காணொளிக் குறிப்பு, அதிமுக – பாஜக
பாஜகவுடன் கூட்டணி அமைப்பது அதிமுகவுக்கு பலன் அளித்துள்ளதா? - ஒரு வரலாற்றுப் பார்வை

இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்த பாஜக மூத்த தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித் ஷா மீண்டும் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதிப்படுத்தினார்.

''இந்த கூட்டணி 1998-ஆம் ஆண்டில் இருந்தே இருக்கும் கூட்டணிதான். தொடர்ச்சியாக பல தேர்தல்களை சேர்ந்தே சந்தித்தோம்'' என அமித் ஷா கூறினார்.

முதன்முறையாக இவ்விரண்டு கட்சிகளும் 1998-ஆம் ஆண்டு சேர்ந்து நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொண்டன. அப்போது முதல் இப்போது வரை இந்த கூட்டணி கடந்து வந்த பாதை என்ன?

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு