காணொளி: மகன் இறப்புக்கு நீதி கேட்டு ஜென் ஸி இளைஞர்களுடன் சேர்ந்து போராடும் தாய்

காணொளிக் குறிப்பு, மகனின் இறப்புக்கு நீதி கேட்டு போராடும் தாய்
காணொளி: மகன் இறப்புக்கு நீதி கேட்டு ஜென் ஸி இளைஞர்களுடன் சேர்ந்து போராடும் தாய்

செர்பியா நாட்டில் கடந்த ஆண்டு நிகழ்ந்த ரயில் நிலைய விபத்தில் குழந்தைகள் உட்பட 16 பேர் உயிரிழந்தனர். இதில் டிஜானா என்பவரின் ஸ்டெபனும் ஒருவர். இந்தத் திட்டத்தில் ஊழல் நடைபெற்றதால் தான் விபத்து நிகழ்ந்ததாகக் கூறி ஜென் ஸி இளைஞர்கள் அரசுக்கு எதிராகப் போராடி வருகின்றனர்.

இந்தப் போராட்டங்களில் டிஜானாவும் கலந்து கொள்கிறார். தனது மகனின் இறப்புக்கு நீதி கேட்டு போராடுவதாக அவர் தெரிவிக்கிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு