ஆக்ஸிஜன் இல்லாமல் 78 மீட்டர் ஆழத்தில் 3.15 நிமிடம் - உலக சாதனை படைத்த யுக்ரேன் பெண்
ஆக்ஸிஜன் இல்லாமல் 78 மீட்டர் ஆழத்தில் 3.15 நிமிடம் - உலக சாதனை படைத்த யுக்ரேன் பெண்
யுக்ரேன் நாட்டைச் சேர்ந்த ஃப்ரீடைவிங் வீராங்கணையான கடேரினா சடுர்ஸ்க்கா உலக ஃப்ரீடைவிங் சேம்பியனாக தேர்வாகி சாதனை படைத்துள்ளார்.
ஆக்சிஜன் போன்ற எந்தவித உபகரணங்களின் உதவியும் இல்லாமல் ஆழ்கடலில் மூழ்குவதுதான் ஃப்ரீடைவிங். இதில் கடேரினா 78 மீட்டர் ஆழம் வரை சென்று 3 நிமிடம் மற்றும் 15 விநாடிகள் மூச்சை அடக்கி சாதனை படைத்துள்ளார்.
ரஷ்யா - யுக்ரேன் போரால் பாதிக்கப்பட்டுள்ள தனது சொந்த ஊரான கார்கிவ் நகரில் கடேரினா தற்போது பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
யுக்ரேன் மக்களின் சக்தியை உலகுக்கு வெளிப்படுத்தும் விதமாக இந்த சாதனையைப் படைத்ததாக அவர் கூறுகிறார்.

பட மூலாதாரம், X/bety kovac
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



