அத்வானி ரத யாத்திரை, ராகுலின் நீதி யாத்திரை பற்றி லாலு பிரசாத் யாதவ் கூறுவது என்ன?

காணொளிக் குறிப்பு, தேர்தல் நேரத்தில் யாத்திரையா? ராகுல் காந்திக்கு லாலு பிரசாத் அறிவுரை
அத்வானி ரத யாத்திரை, ராகுலின் நீதி யாத்திரை பற்றி லாலு பிரசாத் யாதவ் கூறுவது என்ன?

வரும் மக்களவை தேர்தலில் 'இந்தியா' கூட்டணிதான் வெற்றி பெறும் என்று ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவரும், பிகாரின் முன்னாள் முதலமைச்சருமான லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.

பிபிசி உடனான சிறப்பு உரையாடலில், 'இந்தியா' கூட்டணி சிதைந்துவிட்டதாக மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் இந்த கூட்டணி தற்போது மீண்டும் அதன் வடிவத்திற்கு திரும்புவதாக அவர் கூறினார்.

பாஜக வெற்றி பெறும் என்று பரவலாக கூறப்படுவதை நிராகரித்த அவர், ஊடகங்கள் முற்றிலும் கோழைத்தனமானவை என்றார்.

”எல்லா ஊடகங்களும் விலைபோய்விட்டன. மோதி மட்டுமே அவர்களின் மனதில் உள்ளார். ஆனால் இந்த முறை மோதி வரமாட்டார், நான் ஆரூடம் சொல்கிறேன். மோதி வரமாட்டார், இந்தியா கூட்டணி வெல்லும்" என்று லாலு பிரசாத் யாதவ் கூறினார்.

'இந்தியா' கூட்டணி குறித்து பல கேள்விகள் தற்போது எழுப்பப்படுகின்றன. ஏனெனில் இந்த கூட்டணியின் பல முக்கிய முகங்கள் அதை விட்டு வெளியேறிவிட்டன.

அவர்களில் முக்கியமானவர் பிகார் முதலமைச்சர் நிதீஷ்குமார். ஒரு காலத்தில் 'இந்தியா' கூட்டணியின் முக்கிய தூணாக கருதப்பட்ட நிதிஷ்குமார், சமீபத்தில் இந்த மகா கூட்டணியில் இருந்து பிரிந்து பிகாரில் பாஜகவுடன் இணைந்து ஆட்சி அமைத்துள்ளார்.

இது தவிர உத்தரபிரதேசத்தில் ஜெயந்த் செளத்ரியின் ராஷ்ட்ரிய லோக் தளமும் (ஆர்எல்டி) என்டிஏவில் இணைந்துள்ளது.

'அயோத்தி' ரத யாத்திரையின் போது அத்வானியை கைது செய்யச் சொன்னது யார்? அப்போது என்ன நடந்தது? என்பன போன்ற தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அத்துடன், ராகுல் காந்திக்கு முக்கிய அறிவுரைகளையும் கூறியுள்ள அவர், எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் குறித்த கணிப்புகளையும் தெரிவித்துள்ளார்.

முழு விவரத்தை காணொளியில் பார்க்கலாம்.

பிபிசிக்கு லாலு பேட்டி

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)