ஆசிய விளையாட்டுப் போட்டியில் சாதனை படைத்த கோவை இரட்டை சகோதரிகள்
கோவையைச் சேர்ந்த ராம்ராஜ் (63) – மீனா (59) தம்பதியினருக்கு, இரட்டைக் குழந்தைகளாகப் பிறந்த வித்யா மற்றும் நித்யாவுக்கு தற்போது 25 வயதாகிறது.
இருவரும் இணைந்து தடகள போட்டிகளில் பங்கேற்று தேசிய மற்றும் சர்வதேச அளவில் பல சாதனைகளை படைத்துள்ளனர். இந்த நிலையில், வித்யா மற்றும் நித்யா ஆகிய இருவரும் சீனாவின் ஹாங்சோவில் நடந்த 19-ஆவது ஆசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றனர்.

பட மூலாதாரம், NITHYA RAMRAJ
பிபிசி தமிழிடம் பேசிய நித்யா, ‘‘என் சகோதரி, பி.டி.உஷாவின் சாதனையை சமன் செய்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. விரைவில் வித்யா பி.டி.உஷாவின் சாதனையை முறியடிப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. இருவரின் லட்சியம் மற்றும் இதுவரை கடந்து வந்த பாதை குறித்து மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார் நித்யா.
ஒளிப்பதிவு / படத்தொகுப்பு - ஜெரின் சாமுவேல்
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



