பிடிவாதமாக இருந்த பைடனின் மனமாற்றத்திற்கு யார் காரணம்?- ஒபாமா, டிரம்ப் கூறியது என்ன?
பிடிவாதமாக இருந்த பைடனின் மனமாற்றத்திற்கு யார் காரணம்?- ஒபாமா, டிரம்ப் கூறியது என்ன?
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான போட்டியில் இருந்து விலகுவதாக அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
தான் சார்ந்திருக்கும் ஜனநாயகக் கட்சி மற்றும் தேசத்தின் நலனுக்காக இந்த முடிவை எடுத்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் துணை அதிபராக பணியாற்றும் இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸை அதிபர் வேட்பாளராக ஆதரிப்பதாகவும் ஜோ பைடன் கூறியுள்ளார்
நவம்பர் மாதத்தில் தேர்தல் நடைபெற இருக்கின்ற சூழலில் இந்த முடிவை எடுத்துள்ளார் பைடன். டிரம்ப் உடனான விவாத நிகழ்வில் மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்திய காரணத்திற்காக அவர் போட்டியில் இருந்து விலக வேண்டும் என்ற குரல் ஜனநாயகக் கட்சியினர் மத்தியில் வலுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



