'புதிய இதயம் மூலம் வாழ்க்கையே பரிசாக கிடைத்துள்ளது' - நெகிழும் இளைஞர்
'புதிய இதயம் மூலம் வாழ்க்கையே பரிசாக கிடைத்துள்ளது' - நெகிழும் இளைஞர்
அக்ஷய்க்கு 26 வயதில் மாரடைப்பு ஏற்பட்டது. இப்போது அவருக்கு ஆரோக்கியமான, புதிய இதயம் கிடைத்துள்ளது. 30 வயதான அக்ஷய் அம்பர்நாத் பகுதியில் வசிக்கிறார். 26 வயதில் அவருக்கு முதல் மாரடைப்பு ஏற்பட்டது.
இதய மாற்று அறுவை சிகிச்சை செய்வதைத் தவிர அக்ஷய்க்கு வேறு வாய்ப்பு இருக்கவில்லை. அக்ஷய்க்கு இதயத்தை தானமாக வழங்குவதற்கு ஒருவர் முன்வந்தார்.
அறுவை சிகிச்சையை அடுத்து, முன்னெச்சரிக்கையாக ஓராண்டு தனிமைப்படுத்தலுக்குப் பிறகு அக்ஷய் இப்போது வேலைக்கு வெளியே செல்வதற்குத் தயாராக உள்ளார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



