தங்கம் விலை திடீரென இவ்வளவு உயர்வது ஏன்? குறைய வாய்ப்புள்ளதா?
இந்தியாவில் தங்கம் முதலீடு என்ற ரீதியில் அல்லாமல், பல்வேறு சமூக, கலாசார காரணங்களுக்காக அதிகம் வாங்கப்படும் பொருளாக உள்ளது. அதிலும், சமீப காலமாகவே தங்கத்தின் விலை தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. எப்பொழுதாவது, அதுவும் சிறிய அளவில் மட்டுமே தங்கத்தின் விலையில் சரிவை பார்க்க முடிகிறது.
ஏப்ரல் 15ஆம் தேதி நிலவரப்படி ஆபரண தங்கத்தின் விலை சுமார் 6,790 ருபாய்க்கும் சவரன் 54,320 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
ஏப்ரல்1 முதல் ஏப்ரல் 15ஆம் தேதி வரையிலான 15 நாட்கள் காலகட்டத்தில் மட்டும் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு சுமார் 420 ரூபாயும் சவரனுக்கு 3,360 ரூபாயும் அதிகரித்திருக்கிறது.
தங்கம் விலை தொடர்ந்து அதிகமாவது ஏன், அதன் விலை குறைய வாய்ப்புள்ளதா என்பதை இக்காணொளியில் காணலாம்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



