இலங்கையில் நீர்த் தேக்கம் ஒன்றில் நீந்திச் செல்லும் யானைகள் - காணொளி

காணொளிக் குறிப்பு, யானைகள் நீந்தும் க்யூட் வீடியோ
இலங்கையில் நீர்த் தேக்கம் ஒன்றில் நீந்திச் செல்லும் யானைகள் - காணொளி

வடக்கு இலங்கையில் உள்ள நீர்த் தேக்கம் ஒன்றில் யானை கூட்டம் நீந்திச் செல்லும் காட்சி வெளியாகியுள்ளது.

இந்த பெரிய விலங்குகள் உண்மையிலேயே சிறப்பாக நீந்தக் கூடியவை.

மனிதன் தவிர்த்து, பெரும்பாலான பாலூட்டிகளைப் போலவே, யானைகளும் இயற்கையிலேயே நீச்சல் திறன் கொண்டவை...

அளவில் மிகப்பெரியதாக இருந்தாலும் நீரில் மிதப்பதற்கு போதுமான சக்தி யானைகளிடம் உண்டு.

கால்களை துடுப்பாகவும் துதிக்கையை சுவாசிப்பதற்காகவும் யானைகள் பயன்படுத்துகின்றன.

வலிமையான கால்கள் மற்றும் துதிக்கையை கொண்டிருப்பதால் யானைகளால் வெகு தூரம் வரை நீந்திச் செல்ல முடியும்.

2017-ல் கடலில் 17 கிலோ மீட்டர் தொலைவுக்கு யானைகள் நீந்திச் செல்வதை இலங்கை கப்பற்படை கண்டறிந்தது. அடித்துச் செல்லப்பட்டதாக நம்பப்பட்ட இந்த பலசாலி விலங்குகள் பின்னர் பத்திரமாக மீட்கப்பட்டன.

வெகுநேரம் நீந்திச் சென்று மறுகரையை அடைவதற்கு முன்பு சிறிது நேரம் ஓய்வெடுப்பதற்காக இந்த யானை கூட்டம் தண்ணீரில் விளையாடவும் செய்கிறது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)