ஒரே இடத்தில் 37,000 பெண்கள் ஒன்றுகூடி பிரமாண்ட நடனம் - எங்கே? எதற்காக?
இது 37 ஆயிரம் பெண்கள் ஒரே இடத்தில் ஒன்று கூடிய தருணம். இவ்வளவு அழகான காட்சியை நீங்கள் இதற்கு முன்பு கண்டிருப்பீர்களா என்பது சந்தேகம் தான். இந்த பெண்கள், பாரம்பரிய சிவப்பு நிற உடையில் தங்க நகைகளை அணிந்து ஒரு பெரிய வட்டம் அமைத்து ராஸ் நடனமாடினார்.
இது கர்பா நடனத்தின் மற்றொரு பகுதி.
குஜராத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 37 ஆயிரம் பெண்கள் இங்கே குழுமினர். இவர்கள் அனைவருமே அஹிர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.
குஜராத் மாநிலத்தில் 37 ஆயிரம் பெண்கள் கூடிநின்று நடனமாடிய காட்சி இது. அஹிர் சமூகத்தைச் சேர்ந்த இப்பெண்கள் தங்கள் பாரம்பரிய சிவப்பு உடையில் துவாரகையில் கூடி வட்டமாக ராஸ் நடனத்தில் ஈடுபட்டனர்.
இது ஒரு புதிய சாதனை என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர். 800 ஏக்கர் பரப்பளவிலான நிலத்தில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
3 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த நிகழ்ச்சியை காண வந்ததாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர். இரண்டு லட்சத்துக்கும் அதிகமானோர் பிரசாதம் பெற்றுச் சென்றுள்ளனர்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



