கோவை தூய்மைப் பணியாளர்களுக்கு ரூ.648 தினக்கூலி நிர்ணயம்: “வாழ்க்கையை நடத்துவதே போராட்டம்”

தனியார்மயம் வேண்டாம்` ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் ஏன் தொடர்ந்து போராடுகிறார்கள்?
படக்குறிப்பு, மாநகராட்சி நிர்ணயித்த ஊதியம் குறித்து அதிருப்தி நிலவுவது ஒருபுறம் இருந்தாலும், உயர்த்தி வழங்கப்பட்ட இந்த தொகைகூட கைக்கு வந்தால்தான் நிச்சயம் என்கிறார் தூய்மை பணியாளர் உமா.
    • எழுதியவர், மோகன்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

கோவை மாநகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களின் தினக்கூலியை ரூ.440ல் இருந்து ரூ.648 ஆக உயர்த்தி நிர்ணயம் செய்துள்ளது மாநகராட்சி மாமன்றம். இந்த அறிவிப்பு தங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யவில்லை என்றும், கடும் ஏமாற்றத்தைத் தருவதாகவும் கூறுகிறார்கள் பல மாதங்களாகப் போராடிவந்த தூய்மைப் பணியாளர்கள்.

அவுட் சோர்சிங் எனப்படும் வெளிமுகமை மூலம் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவுப் பணியில் ஈடுபட்டுவரும் இந்த தொழிலாளர்கள் ஊதிய உயர்வு, நீண்ட காலம் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்வோருக்கு பணி நிரந்தரம், வார விடுமுறை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த சில மாதங்களாக பல கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என கோவை மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, வேலை நிறுத்தம், போராட்டம் போன்றவை கைவிடப்பட்டன. 

இந்த நிலையில் டிசம்பர் 29 ஆம் தேதியன்று நடைபெற்ற கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு 2023 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் ரூ.648 தினக்கூலியாக வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் போராடிய தொழிலாளர்களுக்கு இந்த அறிவிப்பு ஏமாற்றத்தையே தந்துள்ளது.

தூய்மை பணியாளர்களின் போராட்டத்தை முன்னெடுத்து பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்ட சமூக நீதிக் கட்சியின் தலைவர் வழக்கறிஞர் பன்னீர்செல்வம் பிபிசி தமிழிடம் பேசுகையில், “கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் 18 கோரிக்கைகள் முன்வைத்திருந்தோம். 

அதில், `மாவட்ட நிர்வாகம் பரிந்துரைத்தபடி ரூ.721 தினசரி ஊதியம் வழங்க வேண்டும். கட்டாயம் வார விடுமுறை வேண்டும், அதிகாலை 7 மணிக்கு பணி தொடங்க வேண்டும், நீண்ட காலம் ஒப்பந்த முறையில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு பணி நிரந்தரம் வழங்க வேண்டும்’ ஆகியவை பிரதான கோரிக்கைகள்.

ஆனால் தற்போது தினக்கூலி ரூ.640 எனத் தீர்மானித்துள்ளார்கள். பல்வேறு துறைகளில் ஒப்பந்த ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் எது குறைவோ அதை நிர்ணயிப்பதாக கூறி இத்தொகையை முடிவு செய்துள்ளார்கள். இது போதாது. 721 ரூபாய் தினசரி ஊதியமாக நிர்ணயித்து, அதையும் இடைத்தரகர்கள் மூலம் இல்லாமல் முழுமையாக பணியாளர்களுக்கு தொகுப்பூதியமாக நேரடியாக வழங்க வேண்டும்” என்றார்.

தனியார்மயம் வேண்டாம்` ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் ஏன் தொடர்ந்து போராடுகிறார்கள்?

தமிழ்நாடு அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கடந்த அக்டோபர் 10 ஆம் தேதி அரசாணை எண் 152 ஐ வெளியிட்டிருந்தது.

அதில் தூய்மை பணியாளர்கள், துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள், உள்ளிட்ட நிரந்தரப் பணியாளர்கள் ஓய்வு பெற்ற பிறகு அந்தப் பணியிடங்களை நிரப்பக்கூடாது. எதிர்வரும் காலங்களில் இப்பணிகளை வெளிமுகமை மூலம் (Outsourcing) மேற்கொள்ளவேண்டும் என அந்த அரசாணை கூறுகிறது.

“இது தூய்மைப் பணியாளர்களுக்கு விரோதமாக இருக்கிறது, இதனை ரத்து செய்ய வேண்டும்” என்கிறார் வழக்கறிஞர் பன்னீர்செல்வம். 

பிபிசி தமிழிடம் பேசிய அவர், “ஒப்பந்தப் பணியாளர்களை நிரந்தரமாக்க வேண்டும் என நாங்கள் கோரி வருகிறோம். ஆனால் மாநகராட்சிப் பணிகளில் இனி நிரந்தர வேலை என்பதே இல்லை. அனைத்துப் பணிகளும் வெளிமுகமை மூலம் மட்டுமே நிரப்பப்படும் என அரசு முடிவெடுத்திருப்பது பணியாளர்கள் நலனுக்கு எதிரானது," என்றார்.

தனியார்மயம் வேண்டாம்` ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் ஏன் தொடர்ந்து போராடுகிறார்கள்?
படக்குறிப்பு, “இது தூய்மைப் பணியாளர்களுக்கு விரோதமாக இருக்கிறது, இதனை ரத்து செய்ய வேண்டும்” என்கிறார் வழக்கறிஞர் பன்னீர்செல்வம். 

மேலும் பேசியவர், "மாநகராட்சியின் சமீபத்திய தீர்மானத்தில் எங்களுக்கு முழு திருப்தி இல்லை. தூய்மை பணியாளர்களின் இதர கோரிக்கைகளை வலியுறுத்தியும், அரசாணை 152 ஐ ரத்து செய்யக் கோரியும் எங்கள் போராட்டங்கள் தொடரும்” என்றார் 

திமுக தனது தேர்தல் அறிக்கையில் தூய்மைப் பணியாளர்களுக்கு வாரம் ஒரு நாள் விடுமுறை வழங்கப்படும், விடுமுறை நாட்களில் பணிபுரிய நேரிட்டால் கூடுதல் பணி நேர ஊதியம் வழங்கப்படும், தூய்மை பணியாளர்களின் பணி, ஊதியம், ஓய்வூதியம் போன்ற கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்படும் என்பது உள்ளிட்ட ஐந்து வாக்குறுதிகளை வழங்கியிருந்தது குறிப்பிடத்தகுந்தது. 

தனியார்மயம் எப்போது தொடங்கியது? 

தூய்மை பணிகளை தனியார்மயப்படுத்தியதுதான் சிக்கல்களின் தொடக்கம் என்கிறார் சிஐடியூ அமைப்பைச் சேர்ந்த ரங்கராஜ்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், “1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு ஒரு சட்டம் இயற்றியது. அதன் பின்னர்தான் அரசுப் பணிகளை வெளிமுகமை மூலம் அமல்படுத்தும் முறை நடைமுறைக்கு வந்தது.

கோவை தூய்மைப் பணியாளர்களுக்கு ரூ.648 தினக்கூலி நிர்ணயம்: “வாழ்க்கையை நடத்துவதே போராட்டம்”

தூய்மை பணி தனியார் ஒப்பந்ததாரர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டது. இதில் பல மோசடிகள் நடைபெறுகின்றன. தமிழ்நாடு அரசு 2017-ம் ஆண்டு தூய்மை பணியாளர் ஊதியம் தொடர்பாக அரசாணை ஒன்றை வெளியிட்டிருந்தது. ஐந்து ஆண்டுகள் ஆன பிறகும் அந்த அரசாணை எங்குமே முறையாக அமல்படுத்தப்படவில்லை. பெரும்பாலான மாநகராட்சி மற்றும் நகராட்சிகளிலும் இதே நிலைதான் நிலவுகிறது. 

தூய்மை பணியாளர்களின் ஈ.பி.எப் நிதிக்கு ஒப்பந்ததாரர்கள் தரப்பில் 13% செலுத்த வேண்டும். ஆனால் எந்த ஒப்பந்ததாரரும் தங்கள் பங்களிப்பை முறையாக செலுத்துவதில்லை. தொழிலாளர் பங்களிப்பில் பிடித்தம் செய்யப்படும் தொகையைக்கூட முழுமையாக செலுத்துவதில்லை,” என்றார் ரங்கராஜ்.

பெரும்பாலான இடங்களில் ஒப்பந்தம் பெற்ற வெளிமுகமைகள், நிர்ணயிக்கப்பட்ட ஊதியத்தில் இருந்து கணிசமான தொகையை முறைகேடாக பிடித்தம் செய்துகொண்டு சுமார் ரூ.340 மட்டுமே வழங்குகின்றன. முன்னர் பணியாளர்கள் தொகுப்பூதிய அடிப்படையில் பணிக்கு இணைவார்கள். மூன்று ஆண்டுகள் கழித்து பணி நிரந்தரம் செய்யப்படும். தற்போது பணி நிரந்தரமே என்பதே இல்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

தனியார்மயம் வேண்டாம்` ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் ஏன் தொடர்ந்து போராடுகிறார்கள்?

பேரூராட்சிகளில் இந்த சிக்கல் இல்லை 

ஆனால் பேரூராட்சிகளில் ஒப்பந்தாரர் இல்லை. மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் தூய்மை பணி மேற்கொள்ளப்படுகிறது. அங்கு ஊதியம் சரியாக வழங்கப்படுகிறது. தனியார் ஒப்பந்ததாரர்கள்தான் முறையாக ஊதியம் வழங்குவதில்லை, என்று கூறும் ரங்கராஜ், தற்போது பேரூராட்சிகளிலும் வெளிமுகமை மூலம் தூய்மை பணிகளை மேற்கொள்ள 139 என்கிற அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என்கிறார்.

“ஒப்பந்த தொழிலாளர்கள் என்றாலும் அவர்களுக்கென சட்டங்கள் உள்ளன. ஆனால் அவை முறையாக கடைபிடிக்கப்படுவதில்லை. அதை கண்காணிக்கும் முறை நகராட்சி, மாநகராட்சிகளில் இருப்பதில்லை. தொழிலாளர் விரோதமாக உள்ள அரசாணைகளை ரத்து செய்ய வலியுறுத்தி ஜனவரி 10 ஆம் தேதி மாநிலம் தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்பட உள்ளது” என்று கூறுகிறார் அவர்.

திமுக தன் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்

“ஊதியம் தொடர்பான நிர்வாக கோரிக்கைகளை உள்ளாட்சி அமைப்புகள், மாமன்றங்கள் நிறைவேற்றினாலும், தமிழ்நாடு அரசு, கடைநிலைப் பணிகளில் தனியார்மயம் கூடாது என்கிற கொள்கை முடிவினை எடுக்கவேண்டும். தூய்மைப் பணியாளர்கள் தொடர்பாக தன் தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளுக்கு நேரெதிராக திமுக செயல்படக்கூடாது” என்கிறார் ரங்கராஜ். 

தனியார்மயம் வேண்டாம்` ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் ஏன் தொடர்ந்து போராடுகிறார்கள்?

கைக்கு வந்தால்தான் உறுதி 

மாநகராட்சி நிர்ணயித்த ஊதியம் குறித்து அதிருப்தி நிலவுவது ஒருபுறம் இருந்தாலும், உயர்த்தி வழங்கப்பட்ட இந்த தொகைகூட கைக்கு வந்தால்தான் நிச்சயம் என்கிறார் தூய்மை பணியாளர் உமா. இவர் கடந்த 15 ஆண்டுகளாக கோவை மாநகராட்சியில் வெளிமுகமை மூலம் ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணியாளராக வேலை செய்து வருகிறார்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், “போராட்டங்கள் நடத்தினாலும் தற்போது வரை ரூ.340 தான் தினசரி ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது. அதுவும் ஒவ்வொரு மாதமும் 15 ஆம் தேதிக்குப் பிறகுதான் வருகிறது. இதை வைத்து வீட்டு வாடகை, போக்குவரத்து செலவு, குழந்தைகளின் படிப்பு ஆகியவற்றை பார்க்க வேண்டியுள்ளது. இந்த வருமானம் நிச்சயம் போதவில்லை. பெரும்பாலான தொழிலாளர்கள் வருமானம் போதவில்லை என்பதால் தூய்மை பணி முடிந்த பிறகு வேறு வேலைகளுக்குச் சென்றுதான் குடும்ப செலவுகளை சமாளிக்கும் நிலையில் உள்ளார்கள்,” என்றார்.

மேலும் கூறிய அவர், “இதற்கு மத்தியில் தொழிலாளர்களை போராட தூண்டுகிறேன் என காவல்துறையில் என் மீது புகார் வேறு அளித்துள்ளார்கள். பணி நேரமும் ஒழுங்குபடுத்தப்படவில்லை. தூய்மை பணியாளர்களிடம் கூடுதலாக வேலை வாங்குகிறார்கள். பி.எப் கணக்கிலும் எந்த பங்களிப்பும் செலுத்தப்படவில்லை. ஊதிய உயர்வு என்று கூறுகிறார்கள். அந்த தொகை முழுமையாக கைக்கு வந்தால்தான் நிச்சயம்” என்றார். 

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: