ரஃபா எல்லை: காஸாவை விட்டு வெளியேறும் ஒரே பாதையையும் எகிப்து மூடியதால் மக்கள் தவிப்பு

காணொளிக் குறிப்பு, எகிப்துடனான காஸாவின் எல்லையான ரஃபா திறக்கப்படாததால், ஆயிரக்கணக்கானோர் சிக்கியுள்ளனர்.
ரஃபா எல்லை: காஸாவை விட்டு வெளியேறும் ஒரே பாதையையும் எகிப்து மூடியதால் மக்கள் தவிப்பு

எகிப்துடனான காஸாவின் எல்லையான ரஃபா திறக்கப்படாததால், வெளியேற விரும்பும் ஆயிரக்கணக்கானோர் காஸாவில் சிக்கியுள்ளனர்.

காஸாவின் தெற்கு பகுதியில் இருக்கும் சிறிய எல்லை தான் ரஃபா என அழைக்கப்படுகிறது. காஸாவின் நீண்ட எல்லைப் பகுதி இஸ்ரேலுடனானது. அது மூடப்பட்டிருப்பதால், வெளியே செல்ல விரும்புவோருக்கு ரஃபா எல்லை மட்டுமே ஒரே வழி. ஆனால் இஸ்ரேல் போர் நிறுத்தம் என அறிவிக்கவில்லை.

எனவே, எகிப்து, தனது நாட்டு ஊழியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யும் வரை எல்லையை திறக்க முடியாது என கூறி வருகிறது. இதனால் காஸாவுக்குள் இருக்கும் வெளிநாட்டவரும், வெளியே செல்ல விரும்பும் சில பாலத்தீனர்கள் செல்ல முடியாமல் சிக்கியுள்ளனர்.

இஸ்ரேல் vs பாலத்தீனம்

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)