காணொளி: பாதியில் நின்ற மோனோ ரயிலுக்குள் சிக்கிக்கொண்ட பயணிகள் மீட்கப்பட்டது எப்படி?
காணொளி: பாதியில் நின்ற மோனோ ரயிலுக்குள் சிக்கிக்கொண்ட பயணிகள் மீட்கப்பட்டது எப்படி?
மும்பையில் பலத்த மழைக்கு நடுவே மோனோ ரயில் ஒன்று மின் தடை காரணமாக பயணிகளோடு பாதியிலேயே நின்றது.
மைசூர் காலனி ரயில் நிலையம் அருகே பாதியில் நின்ற இந்த ரயிலுக்குள் சிக்கிய பயணிகள் மும்பை மாநகராட்சியின் உதவி எண்ணுக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு துறையினர் ரயிலில் சிக்கிய பயணிகளை மீட்டு வருகின்றனர்.
மீட்கப்பட்ட பயணி ஒருவர் பேசுகையில் ரயிலில் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் உள்ளனர் என்றும் மூச்சுவிடுவது சிரமமாக இருந்ததாகவும் தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



