இந்தியர் சுபான்ஷு சுக்லா உள்பட நால்வர் குழு சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு புறப்பாடு

காணொளிக் குறிப்பு, சுபான்ஷு சுக்லாவுடன் ஐஎஸ்எஸ்க்கு புறப்பட்ட ஆக்ஸியம் 4 குழு
இந்தியர் சுபான்ஷு சுக்லா உள்பட நால்வர் குழு சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு புறப்பாடு

சுபான்ஷு சுக்லாவுடன் சர்வதேச விண்வெளி மையம் நோக்கி ஆக்ஸியம் 4 குழு புறப்பட்டது.

ஆக்ஸியம்-4 திட்டத்தின் கீழ் இந்தியாவைச் சேர்ந்த சுபான்ஷு சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் செல்கிறார். அவர் உள்பட 4 விண்வெளி வீரர்களுடன் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலத்தை சுமந்து கொண்டு ஃபால்கன்-9 ராக்கெட் அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து இன்று (ஜூன் 25) இந்திய நேரப்படி நண்பகல் 12:01 மணியளவில் புறப்பட்டுச் சென்றது.

இதன் மூலம் விண்வெளி பயணத்தில் இந்தியா மற்றுமொரு சாதனையை புரிய உள்ளது. இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா முதல் இந்தியராக சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு (ISS) செல்கிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு