20 மாடி கட்டட அளவிலான பெரிய பனிப்பாறை சரிந்து விழும் காட்சி - காணொளி

காணொளிக் குறிப்பு, அர்ஜென்டினாவில் காலநிலை மாற்றத்தால் வேகமாக உருகும் பனிப்பாறை
20 மாடி கட்டட அளவிலான பெரிய பனிப்பாறை சரிந்து விழும் காட்சி - காணொளி

அர்ஜென்டினாவின் பெரிட்டோ மோரேனோ பனிப்பாறையில் இருந்து சுமார் 70 மீட்டர் உயரமுள்ள ஒரு பனிக்கட்டி தண்ணீரில் சரிந்து விழுகிறது. இந்த காட்சிகள், அர்ஜென்டினாவின் இந்த பிரபலமான பனிப்பாறைக்கு பலரை ஈர்க்கிறது.

ஆனால் சமீப காலமாக, பனிக்கட்டிகள் உடைந்து விழும் அளவு நிபுணர்களை கவலையடையச் செய்துள்ளது.

காரணம், கடந்த 20 வருடங்களில், பெரிட்டோ மோரேனோ பனிப்பாறையில் இந்த அளவுக்கு பனிக்கட்டிகள் உடைவது என்பது அதிகம் நடந்ததில்லை.

அதேசமயம், எப்போதும் இல்லாத அளவுக்கு உலகின் பனிப்பாறைகள் வேகமாக உருகி வருவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.