ஒடிஷா ரயில் விபத்து: உருக்குலைந்த பெட்டிகள் - நெஞ்சை உலுக்கும் படங்கள்

ஒடிஷா ரயில் விபத்து

பட மூலாதாரம், AFP

ஒடிஷா ரயில் விபத்து
படக்குறிப்பு, உருக்குலைந்து கிடக்கும் ரயில் என்ஜின் மற்றும் பெட்டிகள்

கொல்கத்தா மாநிலம் ஹவுராவிலிருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், ஒடிஷா மாநிலம் பாலசோர் அருகே சரக்கு ரயில் ஒன்றின் மீது மோதியது. இதில் சில பெட்டிகள் தடம் புரண்டு அருகே இருந்த தண்டாவாளத்தில் விழுந்தன. அந்த சமயத்தில், அந்த தண்டவாளத்தில் யஷ்வந்த்பூரில் இருந்து ஹவுரா நோக்கி சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்ட பெட்டிகளின் மீது மோதியதில் இந்த கோர விபத்து நேரிட்டது.

இந்த விபத்தில் 260-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 650 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து நடந்த இடத்தில் இன்னும் மீட்புப் பணிகள் தொடர்கின்றன.

ஒடிஷா ரயில் விபத்து

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, ஒடிஷா மாநிலம் பாலசோர் அருகே 2 பயணிகள் ரயில்களும், ஒரு சரக்கு ரயிலும் நேற்று இரவு மோதிக் கொண்டன.
ரயில் பெட்டிகள்

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, விபத்துக்குள்ளான இடத்தில் சேதமடைந்து கிடக்கும் ரயில் பெட்டிகள்
ஒடிஷா ரயில் விபத்து
படக்குறிப்பு, தடம்புரண்ட ரயில் பெட்டிகள் ஒன்றோடொன்று மோதி உருக்குலைந்து கிடக்கும் காட்சி.
ஒடிஷா ரயில் விபத்து

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, ரயில் பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து விலகி தாறுமாறாக சிதறிக் கிடக்கும் காட்சி
ஒடிஷா ரயில் விபத்து
படக்குறிப்பு, உருக்குலைந்து கிடக்கும் பெட்டிகளில் மீட்புப் பணிகள் தீவிரம்
ஒடிஷா ரயில் விபத்து
படக்குறிப்பு, '’இது இந்திய ரயில்வே வரலாற்றில் மூன்றாவது மோசமான விபத்து’’ என தேசிய பேரிடர் மீட்புப் படை தலைவர் அதுல் கர்வால் ஏ.என்.ஐ. செய்தி முகமையிடம் தெரிவித்தார்.
ஒடிஷா ரயில் விபத்து
படக்குறிப்பு, மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருவதால் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: