இந்திய தாக்குதலுக்கு பாகிஸ்தான் நடத்திய பதில் தாக்குதலுக்கு பிறகு ஜம்மு காஷ்மீரின் நிலை என்ன?

காணொளிக் குறிப்பு,
இந்திய தாக்குதலுக்கு பாகிஸ்தான் நடத்திய பதில் தாக்குதலுக்கு பிறகு ஜம்மு காஷ்மீரின் நிலை என்ன?

பாகிஸ்தான் மற்றும் அதன் நிர்வாகத்தின் கீழ் உள்ள காஷ்மீர் பகுதிகளில் உள்ள தீவிரவாதிகளின் மறைவிடங்களில் மே 7 அதிகாலை ஆபரேஷன் சிந்தூர் என்கிற பெயரில் தாக்குதலை நடத்தியுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் பகுதிகளில் இந்தியா மேற்கொண்ட ராணுவ நடவடிக்கைகளுக்குப் பிறகு, ஜம்மு காஷ்மீரின் எல்லைப் பகுதிகளில் பதற்றம் அதிகரித்துள்ளது. பூஞ்ச், உரி, குப்வாரா உள்படப் பல எல்லைப் பகுதிகளில் வசிக்கும் மக்களிடம் பேசி நிலைமையைத் தெரிந்து கொண்டோம். இரவு முழுவதும் குண்டுவீச்சு சத்தம் கேட்டுக் கொண்டிருந்ததாக மக்கள் தெரிவித்தனர்.

இந்தத் தாக்குதல் பற்றி ஜம்மு காஷ்மீர் மக்கள் என்ன கூறுகின்றனர்? ஜம்மு காஷ்மீரின் தற்போதைய நிலை என்ன?

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு