காணொளி: ஆற்று வெள்ளத்தில் சிக்கிய நபர் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு

காணொளிக் குறிப்பு, வெள்ளத்தில் சிக்கிய நபரை மீட்ட இந்திய விமானப்படை
காணொளி: ஆற்று வெள்ளத்தில் சிக்கிய நபர் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு

வட இந்தியாவில் பல்வேறு மாநிலங்கள் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ளன. சத்தீஸ்கர் மாநிலத்திலும் கனமழையால் பல இடங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தின் பஸ்டர் பகுதியில் உள்ள சுக்மா மாவட்டத்தில் சபரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து பாய்ந்தது. இந்த வெள்ளத்தில் நடு ஆற்றில் சிக்கியவரை இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் மீட்டது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு