சட்ட விரோதமாக தங்கியதாக அடுத்தடுத்து 2 விமானங்களில் இந்தியர்களை அனுப்பிய அமெரிக்கா
சட்ட விரோதமாக தங்கியதாக அடுத்தடுத்து 2 விமானங்களில் இந்தியர்களை அனுப்பிய அமெரிக்கா
அமெரிக்காவில் சட்டவிரோதமாக ஆவணங்களின்றி தங்கியிருந்ததாக, இந்தியாவைச் சேர்ந்த 112 நபர்கள் மூன்றாம் கட்டமாக நேற்றிரவு (பிப்ரவரி 16) திருப்பி அனுப்பப்பட்டனர்.
பஞ்சாபின் அமிர்தசரஸ் விமான நிலையத்தில் இந்த விமானம் தரையிறங்கியது.
சனிக்கிழமையன்று இரண்டாம் கட்டமாக 119 நபர்கள் இந்தியா திருப்பி அனுப்பப்பட்டனர்.
முதற்கட்டமாக பிப்ரவரி 5-ஆம் தேதி 104 நபர்கள் திரும்பி அனுப்பப்பட்டனர். முன்னதாக, இந்தியர்கள் கைவிலங்கிட்டு அனுப்பப்பட்டதை எதிர்க்கட்சிகள் விமர்சித்தனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



