ஓநாய்-மனித நோயால் முகம் முழுக்க வளர்ந்த முடி - இந்திய இளைஞர் செய்த கின்னஸ் சாதனை

காணொளிக் குறிப்பு,
ஓநாய்-மனித நோயால் முகம் முழுக்க வளர்ந்த முடி - இந்திய இளைஞர் செய்த கின்னஸ் சாதனை

முகத்தில் அதிக முடியுடையவர் என்ற உலக சாதனையை லலித் படிதார் முறியடித்துள்ளார். லலித்துக்கு 18 வயதாகிறது. அவரது முகத்தின் 95%க்கும் அதிகமான பகுதி முடியால் நிறைந்துள்ளது.

இந்தியாவைச் சேர்ந்த இவருக்கு ஹைபர்ட்ரிகோசிஸ் எனப்படும் அரிய வகை குறைபாடு இருக்கிறது. இது 'வேர்வுல்ஃப் சிண்ட்ரோம்' என்றும் அழைக்கப்படுகிறது. இந்த குறைபாடு ஏற்பட்டால் உடம்பில் இயல்பை விட அதிகமாக முடி வளரக்கூடும்.

இந்த குறைபாடு ஏற்படுவது மிகவும் அரிதானது. தற்போது வரை சுமார் 50 வழக்குகள் மட்டுமே பதிவாகி உள்ளன.

இவரைப்பற்றிய கூடுதல் விவரங்கள் காணொளியில்...

லலித் படிதாருக்கு உள்ள குறைபாடு குறித்தும் விரிவாகத் தெரிந்துகொள்ள:

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)