ஐ.நா.வுக்கு பணம் கொடுப்பது யார்? அதை வைத்து ஐ.நா. என்ன செய்யும்?
ஐநாவுக்கு செலவு செய்வது யார்? அந்த பணத்திற்கு பதிலாக இந்த உலகத்துக்கு ஐநா திரும்ப கொடுப்பது என்ன?
ஐநாவுக்கு கிட்டத்தட்ட 6.21 லட்சம் கோடி ரூபாய் நிதியாக கிடைக்கிறது. அது க்ரோஷியா நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தைவிட பெரியது. இந்த நிதியை அமைதி காக்கும் பணிகள், சர்வதேச நீதிமன்றம் அல்லது 2.6 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான மனிதாபிமான உதவிகள் போன்றவற்றிற்கு ஐநா செலவு செய்கிறது.
அரசுகள், நன்கொடைகள் மற்றும் முதலீடுகள் ஆகியவற்றில் இருந்து இந்த பணம் வருகிறது. இதில் ஒரு பகுதி ஐநாவின் உறுப்பு நாடுகள் செலுத்தும் கட்டணத்தில் இருந்து வருகிறது.
கடந்த 2022ஆம் ஆண்டில் அனைவரையும் விட அதிகமாக 1.5 லட்சம் கோடி ரூபாயை அமெரிக்கா வழங்கியுள்ளது. உலக சுகாதார நிறுவனம் போன்ற ஐநாவின் சில அமைப்புகளுக்கு பணம் வழங்க இந்த கட்டணம் உதவுகிறது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



