காணொளி: 'அதிக எடையுடன் அவதிப்படும் குழந்தைகள்' - தவிர்ப்பது எப்படி?

காணொளிக் குறிப்பு, 'அதிக எடையுடன் அவதிப்படும் குழந்தைகள்' - தவிர்ப்பது எப்படி?
காணொளி: 'அதிக எடையுடன் அவதிப்படும் குழந்தைகள்' - தவிர்ப்பது எப்படி?

குழந்தைகள் கொழுகொழுவென இருப்பதை பார்த்தாலே கியூட்டாக இருக்கும்.

ஆனால், அதுவே மிகப்பெரும் பிரச்னையாக மாறியுள்ளது.

ஐ.நா.வின் யுனிசெஃப் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி 5-19 வயது குழந்தைகள் மற்றும் பதின்பருவத்தினர் மத்தியில், உடல் எடை குறைவாக இருப்பவர்களை விட அதிக எடையுடன் இருப்பவர்கள் தான் அதிகம் என கூறுகிறது.

அதிலும், பத்தில் ஒருவர் உடல் பருமனால் பாதிக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவவை எடுத்துக்கொண்டால், 2005-06 ஆண்டில் இருந்து 2020-21 ஆண்டுக்குள் உடல் பருமனாக இருக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 127% அதிகரித்துள்ளது.

இது வெறும் உடல் எடை சார்ந்த பிரச்னை மட்டும் இல்லை. குழந்தைகளுக்கு நீரிழிவு, ரத்த அழுத்தம், புற்றுநோய், இதய நோய்கள் வருவதற்கும் இது வழிவகுக்கிறது.

இந்த பிரச்னைக்கு காரணம் என்ன?

பழம், காய்கறி, புரதம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதற்கு பதிலாக கண் கவரும் வகையில் விளம்பரப்படுத்தப்படும் அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகளான சிப்ஸ், பிஸ்கெட்டுகள், சாக்லேட்டுகள் போன்ற உணவுகளை சாப்பிடுவதுதான்.

இதை தவிர்ப்பதற்கான வழி என்ன?

இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய ஊட்டச்சத்து நிபுணர்கள், பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுகளான சிப்ஸ், பிஸ்கெட், அதிக சர்க்கை இருக்கும் சாக்லேட் போன்றவற்றை தவிர்த்து, பழங்கள் காய்கறிகளை அதிகமாக குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும் என்றும் ஜூஸ், ஸ்மூத்தி என்றில்லாமல் பழங்கள், காய்கறிகளை அப்படியே சாப்பிடுவது மிகவும் ஆரோக்கியமானது என்றும் அறிவுறுத்தினர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு