காணொளி: கழிவறை இருக்கையில் பாம்பு
காணொளி: கழிவறை இருக்கையில் பாம்பு
கழிவறை இருக்கையில் ஒரு மிகப்பெரிய பாம்பு இருக்கும் இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது.
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் உள்ள குடியிருப்பு பகுதியான கியான் விஹாரில் உள்ள ஒரு வீட்டின் கழிப்பறையிலிருந்து ஆறு அடி நீளமுள்ள இந்த நாக பாம்பு வெளியில் வந்தது.
கடந்த வியாழன் அன்று, இந்த வீட்டின் உரிமையாளர், கழிப்பறைக்கு சென்று பார்த்தபோது, நாக பாம்பு தலை தூக்கியபடி இருந்ததை கண்டார்.
பாம்பு இருப்பதைக் கண்டு வீட்டில் இருப்பவர்கள் பயந்து வெளியில் ஓடினர். பின்னர் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்த பிறகு, அவர்கள் இந்த பாம்பை மீட்டு காட்டுப் பகுதியில் விட்டனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



