காணொளி: ஜப்பானில் நடந்த ‘சிரிப்பு’ சடங்கு
காணொளி: ஜப்பானில் நடந்த ‘சிரிப்பு’ சடங்கு
ஜப்பான் நாட்டின் ஹிகாஷி ஆலயத்தில் நடந்த 'சிரிப்பு' சடங்கில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு, 20 நிமிடங்களுக்கு சிரித்தனர்.
ஜப்பானிய புராணங்களில் வேரூன்றிய ஒரு பாரம்பரிய நிகழ்வான 'ஓவராய் ஷின்ஜி' எனும் இந்த சடங்கில், ஊர் மக்களும் பார்வையாளர்களும் ஒன்றாகச் சேர்ந்து சிரித்தனர்.
இந்த விழா, ஒழுக்கம் மற்றும் ஒற்றுமையைப் பற்றியது, எந்தவொரு அசௌகரியத்தையும் பொருட்படுத்தாமல் பங்கேற்பாளர்கள் தொடர்ந்து சிரிக்க வேண்டும் என்று ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.
"ஒருவருக்கொருவர் உதவுவதன் மூலம், நாம் மகிழ்ச்சி அடைகிறோம். சிரிப்பது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது, எனவே நாம் ஆரோக்கியமாகவும், இளமையாகவும், அழகாகவும் இருக்க முடியும்." என இதில் கலந்துகொண்ட ஒரு பெண் கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



