லார்ட்ஸ் டெஸ்ட் தோல்விக்கு என்ன காரணம்? சுப்மன் கில் பதில்
லார்ட்ஸ் டெஸ்ட் தோல்விக்கு என்ன காரணம்? சுப்மன் கில் பதில்
லார்ட்ஸ் டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் தோல்விக்கான காரணம் குறித்து அணியின் கேப்டன் சுப்மன் கில் கூறிய விளக்கம் என்ன?
அதுகுறித்து பிபிசி ஸ்போர்டுக்கு சுப்மன் கில் அளித்த நேர்காணலில், "100 ரன்கள் முன்னிலை எங்களுக்கு மிகவும் முக்கியம் என நினைத்தோம். ஏனென்றால் ஐந்தாவது நாளில் பேட்டிங்கிற்கு பிட்ச் அவ்வளவு சுலபமாக இருக்காது என தெரியும். 100 அல்லது 80 ரன்கள் முன்னிலை பெறக்கூடிய நிலையில்தான் இருந்தோம். அது நடந்திருந்தால் முடிவு வேறு மாதிரி இருந்திருக்கும்.
ஆனால், நீங்கள் போட்டியை முழுமையான கண்ணோட்டத்தில்தான் பார்க்க வேண்டும். நாங்கள் வெற்றிக்கு மிக அருகில் வந்தோம் என நினைக்கிறேன். இருந்தும், எங்களால் இந்த போட்டியில் வெற்றி பெற முடியவில்லை" என்று தெரிவித்தார்.
விரிவாக வீடியோவில்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



