அமெரிக்க போர் விமானத்திற்கு மிக நெருக்கமாக பறந்த ரஷ்ய போர் விமானம்
அமெரிக்க போர் விமானத்திற்கு மிக நெருக்கமாக பறந்த ரஷ்ய போர் விமானம்
அமெரிக்க போர் விமானத்துக்கு அருகே ஆபத்துக்குரிய வகையில் ரஷ்ய போர் விமானம் பறந்ததாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.
அலாஸ்கா அருகே செப்டெம்பர் 23ஆம் தேதி நடந்த இந்த சம்பவத்தின் காணொளியை கடந்த திங்கட்கிழமை அமெரிக்க ராணுவம் வெளியிட்டது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள வட அமெரிக்க வான்வெளி பாதுகாப்பு நிலையம் ரஷ்ய போர் விமானத்தின் செயல் பாதுகாப்பற்றது என்றும் அனைவரையும் ஆபத்துக்கு உள்ளாக்கும் செயல் என்றும் தெரிவித்துள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



