பாகிஸ்தானை தாக்க இந்தியா பயன்படுத்தியதாக கூறப்படும் 'பிரம்மோஸ்' ஏவுகணையின் சிறப்புகள் என்ன?

காணொளிக் குறிப்பு, பிரம்மோஸ்
பாகிஸ்தானை தாக்க இந்தியா பயன்படுத்தியதாக கூறப்படும் 'பிரம்மோஸ்' ஏவுகணையின் சிறப்புகள் என்ன?

பாகிஸ்தானில் இந்தியா பிரம்மோஸ் ஏவுகணைகள் கொண்டு தாக்கியதாக இந்தியா கூறுகிறது. அப்பொழுதில் இருந்து பிரம்மோஸ் நிறைய விவாதங்கள் எழுந்தன.

இருப்பினும், பாகிஸ்தானில் செயல்படுத்தப்பட்ட தாக்குதல்களில் எந்த ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டன என்பதை இந்திய ராணுவம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனால் பிரம்மோஸ் ஏவுகணையின் பயன்பாடு குறித்து ஒரு விவாதம் உள்ளது.

இந்தச் சூழலில், பிரம்மோஸ் ஏவுகணை என்றால் என்ன? அதன் சிறப்பு அம்சங்கள் என்ன என்பதைப் பார்க்கலாம்.

பிரம்மோஸ், உலகின் அதிவேக ஏவுகணைகளில் ஒன்றாகும்.

இது தரையிலிருந்து குறைந்த உயரத்தில், மிக அதிக வேகத்தில் பாய்கிறது.

அதனால் தான் ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு மூலம் இதை இடைமறிப்பது எளிதல்ல. இந்த ஏவுகணைகளால் குறுகிய நேரத்தில் நீண்ட தூரத்திற்கு ஆயுதங்களை எடுத்துச் செல்ல முடியும்.

ரேடார் மூலம் சூப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணைகளைக் கண்காணிப்பது எளிதானது அல்ல. ஏனென்றால் அவை நிலப்பரப்புக்கு மிக அருகில், மிகக் குறைந்த உயரத்தில் பறக்கின்றன.

பிரம்மோஸ் ஏவுகணைகளில் நான்கு வகைகள் உள்ளன. இவற்றில் தரையிலிருந்து தரைக்கு (surface-to-surface), வானிலிருந்து தரைக்கு, கடலிலிருந்து தரைக்கு, நீருக்கடியில் இருந்து தரைக்கு ஆகிய ஏவுதல்கள் அடங்கும்.

ரஷ்யாவின் உதவியுடன் உருவாக்கப்பட்ட, மிகவும் மேம்பட்ட சூப்பர்சோனிக் பிரம்மோஸ் குரூஸ் ஏவுகணைகள் இந்தியாவிடம் உள்ளன.

பிரம்மோஸ் ஏவுகணைகள் மேக் 2.8 வேகத்தில் பயணிக்கின்றன, இது ஒலியின் வேகத்தை விட 2.8 மடங்கு அதிகம். அதாவது அவை வினாடிக்கு சுமார் 900 மீட்டர் என்ற வேகத்தில் பயணிக்கிறது. இந்த ஏவுகணை பாயக்கூடிய தூரம் என்பது 300 முதல் 800 கிலோமீட்டர் வரை இருக்கும். அவற்றால் 300 கிலோ வரையிலான ஆயுதங்களை சுமந்துச் செல்ல முடியும்.

சூப்பர்சோனிக் ஏவுகணைகளால் ஒலியை விட இரண்டு முதல் மூன்று மடங்கு வேகத்தில் பயணிக்க முடியும். ஒரு ஏவுகணை அல்லது விமானம் எவ்வளவு வேகமாகச் செல்கிறது என்பதைக் கூற, அதன் வேகம் ஒலியின் வேகத்துடன் ஒப்பிடப்படுகிறது.

ஒலியின் வேகம் மேக் (Mach) என்ற அலகில் அளவிடப்படுகிறது .

இந்தியா தனது முதல் பிரம்மோஸ் ஏவுகணையை ஜூன் 12, 2001 அன்று சோதித்தது.

இது 2005ஆம் ஆண்டு முதல் இந்திய கடற்படையில் உள்ளது. 2007இல், இந்த ஏவுகணை இந்திய ராணுவத்தில் சேர்க்கப்பட்டது.

அனைத்து விதமான வானிலைகளிலும், பகல் மற்றும் இரவு நேரங்களில் பயன்படுத்தப்படுவதற்கு பிரம்மோஸ் உருவாக்கப்பட்டது.

புவிசார் அரசியல் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, பிரம்மோஸை 21ஆம் நூற்றாண்டின் 'பிரம்மாஸ்திரம்' என்று 'பிரம்மோஸ் ஏரோஸ்பேஸின்' நிறுவனர், தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் மேலாண்மை இயக்குநர் ஏ.எஸ். பிள்ளை, 2023ஆம் ஆண்டு பிரம்மோஸ் வெள்ளி விழா கொண்டாட்டங்களின் போது தெரிவித்திருந்தார்.

தற்போது லக்னோவில் உள்ள இந்த மையம், சூப்பர்சோனிக் பிரம்மோஸ் கப்பல் ஏவுகணைகளை உருவாக்கி சோதிப்பது மட்டுமல்லாமல், இலகுவான, எதிர்கால பயன்பாட்டு ஏவுகணைகளையும் உருவாக்கி உற்பத்தி செய்யும்.

இது வருடத்திற்கு 80 முதல் 100 பிரம்மோஸ் சூப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணைகளை வடிவமைத்து தயாரிக்கும். மேலும், இது 100 முதல் 150 அடுத்த தலைமுறை வகை ஏவுகணைகளையும் உற்பத்தி செய்யும்.

"இன்று, சிறிய பீரங்கிகள் முதல் பிரம்மோஸ் மற்றும் ஆகாஷ் ஏவுகணை அமைப்புகள் வரை மிகப்பெரிய ஏவுகணைகளை கூட பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறோம். நாம் நமது பாதுகாப்பு ஏற்றுமதியை அதிகரிப்பது மட்டுமல்லாமல், பல்வேறு நாடுகளுடன் புதிய கூட்டாண்மைகளையும் மேம்படுத்தி வருகிறோம், இது சர்வதேச அரங்கில் இந்தியாவை பலப்படுத்துகிறது," என்று ராஜ்நாத் சிங் கூறினார்.

பிரம்மோஸ் ஏவுகணைக்கான முதல் வெளிநாட்டு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, இந்தியா இந்த ஏவுகணைகளை பிலிப்பைன்ஸுக்கு வழங்கியுள்ளது.

முழு விவரம் காணொளியில்...

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு