பாக்ஸிங் டே டெஸ்ட்: விராட் கோலி, சாம் கான்ஸ்டாஸிடம் செய்த செயல் - ஐசிசி அளித்த தண்டனை என்ன?

காணொளிக் குறிப்பு,
பாக்ஸிங் டே டெஸ்ட்: விராட் கோலி, சாம் கான்ஸ்டாஸிடம் செய்த செயல் - ஐசிசி அளித்த தண்டனை என்ன?

மெல்போர்னில் இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான பாக்ஸிங் டே டெஸ்டின் முதல் நாளிலேயே, பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.

பும்ரா உள்ளிட்ட இந்திய பந்துவீச்சாளர்களைத் திணற வைத்த ஆஸ்திரேலியாவின் இளம் வீரருக்கும் இந்தியாவின் விராட் கோலிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

மைதானத்துக்கு உள்ளேயே உடல் ரீதியாகவும், வார்த்தைகளாலும் நடந்த மோதலை முடிவுக்குக் கொண்டுவர கள நடுவர் தலையிட வேண்டியிருந்தது.

இந்த மோதல் தொடர்பாக பெரும்பாலும், விராட் கோலி மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)