இரான் 'ஷாவின்' ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்த அரச விழா! 1971-ல் நடந்தது என்ன?
1971-ஆம் ஆண்டு, பாரசீக சாம்ராஜ்ஜியத்தின் 2500-ஆம் ஆண்டு விழாவை நடத்தினார் இரானின் அன்றைய ஷா முகமது ரெசா பாலவி.
உலக நாடுகளின் தலைவர்கள், மன்னர்கள் மற்றும் அரசிகள் என்று முக்கிய நபர்கள் பலர் மூன்று நாட்கள் அந்த விழாவில் பங்கேற்றனர்.
பாரசீக சாம்ராஜ்ஜியத்தின் தொன்மையான தலைநகரான பெர்சேபொலிஸில் அமைந்திருந்த கிராமத்தில் இந்த ராஜ மரியாதையும், விருந்தும் உலக தலைவர்களுக்கு வழங்கப்பட்டது.
பிரிட்டிஷ் ராஜ குடும்பத்தின் உறுப்பினர்கள், எத்தியோப்பிய மன்னர், உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் அதில் பங்கேற்றனர். அப்போது வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையாக செய்தி சேகரிக்கச் சென்ற சாலி குவின் அந்த நிகழ்வில் நடந்த பல்வேறு அம்சங்களை பிபிசியிடம் கூறுகிறார்.
குறிப்பாக, பல லட்சங்கள் செலவில் உருவாக்கப்பட்ட நினைவு கோபுரம் அவருக்கு நல்லவிதமான பெயரை உருவாக்கித் தரவில்லை. மாறாக அவரது நிலையை மோசமாக்கியது.
1979-ஆம் ஆண்டு அவர் இறுதியாக இரானைவிட்டு வெளியேறினார். அவர் சென்ற ஒரே மாதத்தில் இஸ்லாம் புரட்சி இரானில் ஏற்பட்டது. 1980-ம் ஆண்டு அவர் மரணத்தை தழுவினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



