வார்டு கவுன்சிலர் முதல் மாநிலத் தலைவர் வரை - பகுஜன் சமாஜ் ஆம்ஸ்ட்ராங்கின் அரசியல் பயணம் - காணொளி

காணொளிக் குறிப்பு, வார்டு கவுன்சிலர் முதல் மாநிலத் தலைவர் வரை - பகுஜன் சமாஜ் ஆம்ஸ்ட்ராங்கின் அரசியல் பயணம்
வார்டு கவுன்சிலர் முதல் மாநிலத் தலைவர் வரை - பகுஜன் சமாஜ் ஆம்ஸ்ட்ராங்கின் அரசியல் பயணம் - காணொளி

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், பட்டியலின மக்களுக்கான அரசியலில் கீழ் மட்டத்திலிருந்து மேலே வந்தவர்.

சென்னை பெரம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகன்தான் ஆம்ஸ்ட்ராங்.

ஆரம்ப காலத்தில் குத்துச்சண்டை, உடற்பயிற்சி போன்றவற்றில் ஆர்வம் காட்டிய ஆம்ஸ்ட்ராங்கிற்கு பள்ளிக்கூட நாட்களில் இருந்தே அரசியலில் ஆர்வம் இருந்தது.

ஆரம்பத்தில் முன்னாள் எம்.எல்.ஏ-வான ப.ரங்கநாதனுடன் சற்று நெருக்கமாக இருந்தார் ஆம்ஸ்ட்ராங். 2000-வது ஆண்டுவாக்கில் பூவை மூர்த்தி தலைவராக இருந்த புரட்சி பாரதம் கட்சியில் சேர்ந்தார். இதற்கிடையில் திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கேஸ்வரா சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பையும் முடித்தார்.

மேலும் தகவல்களுக்குக் காணொளியைப் பார்க்கவும்.

பகுஜன் சமாஜ் ஆம்ஸ்ட்ராங்

பட மூலாதாரம், BSP - TAMIL NADU UNIT/FB

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)