இளவட்டக்கல்லை தூக்கும் பெண்கள்

காணொளிக் குறிப்பு, இளவட்டக்கல் தூக்கிய பெண்கள்
இளவட்டக்கல்லை தூக்கும் பெண்கள்

பண்டைய காலங்களில் இளவட்டக்கல்லை தூக்கும் ஆண்களுக்கே பெண் கொடுப்பது வழக்கமாக இருந்தது. தற்போது அந்தப் பழக்கம் வழக்கொழிந்துவிட்டாலும், பொங்கல் பண்டிகை காலத்தில் தமிழகம் முழுவதும் பல கிராமங்களில் இன்றும் இளவட்டக்கல் தூக்கும் போட்டி நடத்தப்படுகிறது.

அந்த வகையில், திருநெல்வேலி அருகேயுள்ள வடலியூர் கிராமத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இளவட்டக்கல் தூக்கும் போட்டி நடைபெற்றது. ஆண்களுக்கு நிகராக பெண்களும் இதில் கலந்துகொண்டு இளவட்டக்கல் மற்றும் உரலைத் தூக்கினர்.

இளவட்டக்கல்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: