இலங்கையில் சோழர் ஆட்சிக்குப் பிறகு மீண்டும் பிரமாண்ட ஜல்லிக்கட்டு - வரவேற்பு எப்படி?
இலங்கையில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு சோழர் ஆட்சிக்குப் பிறகு மீண்டும் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது. திருகோணமலை மாவட்டத்தின் சம்பூர் பகுதியில் ஏறு தழுவுதல் என்ற பெயரில் நடத்தப்பட்டது.
தமிழகத்தின் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச் சங்க உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன், இந்தப் போட்டி நடத்தப்பட்டது. இந்தப் போட்டிகளை நடத்துவதற்காக தமிழகத்தில் இருந்து ஜல்லிக்கட்டு வீரர்கள் இலங்கைக்கு வருகை தந்தனர். சம்பூர் பொது விளையாட்டு மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தப் போட்டியில், சுமார் 200 காளை மாடுகள் பங்கு பெற்றன.
சம்பூரில் காளைகளைப் பிடிக்கும் வீரராக செல்வராஜா விஜயகுமார், தனது அனுபவங்களை பிபிசி தமிழுடன் பகிர்ந்துகொண்டார். ''நான் தான் மாடுகளை பிடிப்பேன். மாடு பிடிக்கிறதாக இருந்தால், அது நான்தான். இந்த முறையும் இந்த மாட்டைப் பிடிப்பதற்கு நான் ரெடியாக இருக்கின்றேன்.
எனக்கு இப்போது 57 வயது, குறைந்தது நூற்றுக்கும் மேற்பட்ட மாடுகளை பிடித்திருப்பேன். ஒவ்வொரு வருஷமும் காளையைப் பிடித்து வருகின்றோம்," என செல்வராஜா விஜயகுமார் தெரிவிக்கின்றார்.
முழு விவரம் காணொளியில்...

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



