உலக பெண்கள் குத்துச்சண்டை: இந்தியாவின் ஸ்வீட்டி பூரா, நீத்து கங்காஸ் ஆகியோருக்கு தங்கப் பதக்கம்

ஸ்வீட்டி பூரா

பட மூலாதாரம், BFI

உலக பெண்கள் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் ஸ்வீட்டி பூரா, நீத்து கங்கா ஆகியோருக்கு தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது.

81 கிலோ பிரிவில் தங்கம் வென்ற ஸ்வீட்டி பூராவுக்கு இது இரண்டாவது உலக சாம்பியன்ஷிப் பதக்கம்.

சீனாவின் வாங் லினாவை அவர் வீழ்த்தி தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.

அரையிறுதியில் அவர் ஆஸ்திரேலியாவின் எம்மா கிரீன்ட்ரீயை 4-3 என்ற கணக்கில் வீழ்த்தினார்.

நீத்து கங்காஸ்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, நீத்து கங்காஸ்

முன்னதாக, 48 கிலோ எடைப்பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார் இந்தியாவின் நீத்து கங்காஸ்.

இவர் 2022ஆம் ஆண்டுக்கான பிபிசியின் வளர்ந்துவரும் வீராங்கனை விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இறுதிப் போட்டியில் மங்கோலியாவின் லுட்சைகான் என்பவரை 5-0 என்ற கணக்கில் அவர் வீழ்த்தினார்.

டெல்லியின் இந்திரா காந்தி உள் விளையாட்டு அரங்கில் சனிக்கிழமை நடந்த போட்டிகளில் இந்திய வீராங்கனைகள் இந்த சாதனையைப் புரிந்துள்ளனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: